திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!
கோகிலா விரதம் என்பது சிவ பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் பொருத்தமான வரன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதம் திருமணத்தில் ஏற்படக் கூடிய தடைகளை நீக்குகிறது. திருமணமான பெண்களும் இதனை செய்யலாம். சிவன் மற்றும் அன்னை பார்வதிக்கு உகந்த கோகிலா விரதம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.