திருமணமாகாத விரக்தி; 29 வயது இளைஞர் மதுவில் விஷம்கலந்துகுடித்து தற்கொலை..!! விருதுநகரில் சோகம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை காசு கடை பஜார் பொன்னையா ஆசாரி சந்து பகுதியில் வசித்து வருபவர் பலவேசம். இவரின் மகன் உதயகுமார் (வயது 29) இவர் நகை வாங்கி விற்பனை செய்யும் தொழிலினை செய்து வருகின்றார்.

திருமண வயதில் இருந்த உதயகுமாருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் பார்த்தும் வரன் அமையவில்லை, இதனால் அவர் எப்பொழுதும் தமக்கு மணமாக பெண் கிடைக்கவில்லையே என்று எப்போதும் தனக்கு திருமணம்  செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை என்ற மனவருதத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று உதயகுமார் மதுபானத்தில் எலிமருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை நிறைவேறுவதற்குள் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வீட்டிற்கு வந்தார். தலை சுற்றி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அவரை மீண்டும் குடும்பதினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

ஜிவி பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு..!!

Read Next

தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்..!! முதியவர் கார் மோதி பரிதாப பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular