
*
நமக்கு திருமணமாகி 50 வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொல்லவில்லை” என்றாள் அவள்.
அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாம் இருவரும் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பொழிந்தது. உடனே நான் என் மேலங்கியைக் கழற்றி உன்னை மூடினேன். உன்னை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். நான் மழையில் நனைந்ததால் நோய்வாய்ப்பட்டேன், உனக்கு எதுவும் ஆகவில்லை.”
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை இருவரும் மகளைப் பார்த்துவிட்டு
வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது.
உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோலில் சுமந்து சென்றேன்” என்றான்.
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? கண் மருத்துவரிடம் சென்ற போது, எனக்கு கண் பார்வை மங்கப் போகிறது என்று மருத்துவர் சொல்ல, நான், “பரவாயில்லை
எனக்கு வேறு இரு கண்கள் இருக்கின்றன. அதுதான் என் மனைவி. அவள்தான் என் கண்ணின் மணி” என்றேன்.
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
அதற்கு அவன்: இவைகள் அன்பின் வடிவங்கள் இல்லையா? என்றான்.
அதற்கு அவள்: நிச்சயமாக, நீ என்னை காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதனை சொல்லில் நான் கேட்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அந்த நேரத்தில் அவன்: முதலில் நீ படிக்கட்டிலிருந்து விழுந்து விடாதபடி என் கையை நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்! என்றான்.
இப்போது புரிகிறதா? நான் உன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறேன், உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்ககறேன் என்று’ என்றான்.
காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல, அது வினைச்சொல். காதல் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது நடத்தைகள். காதலில் வார்த்தைகளை விட நடத்தைதான் மிக முக்கியம். வார்த்தைகளில் “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய எத்தனை பல தொடர்புகள் முதல் நடத்தையில் தோல்வி கண்டு முறிந்து விட்டன.
வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும்.