திருமணமான பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் சிறு சிறு விஷயங்கள்..!!

திருமணமான பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் சிறு சிறு விஷயங்கள்…..

• காபி,டீ குடித்த டம்ளரை கழுவப் போடுங்கள். கட்டில்/சோபாக்கு கீழே தள்ளி நாற விடாதீர்கள்.

• அலுவலகத்துக்கு மதிய உணவு எடுத்துச் சென்ற டப்பாவை கழுவப் போடாமல் பல நாட்களுக்கு பத்திரப் படுத்தாதீர்கள்.

• விடுமுறை தினங்களில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே கொஞ்சம் துணிகளை மடித்து வைக்கலாம்.

• சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டால், உணவுப் பாத்திரங்களை எடுத்து வந்து வைக்க உதவலாம்.அதே போல் சாப்பிட்ட பின் எடுத்து வைக்கலாம்.

• சமையலறையில் வேலையாக இருக்கையில், அழைப்பு மணி அடித்தால் யாரென்று பார்க்கலாம்.

• குளிக்க போனால் சோப்பு, ஷாம்பு, துண்டு எதுவும் எடுத்துச் செல்லாமல், அங்கு நின்று கொண்டு அதைக் கொடு, இதைக் கொடு என்று கூச்சலிட வேண்டாம்.

• காகிதக் குப்பைகளை காற்றில் பறக்க விடாமல் குப்பைத்தொட்டியில் போடலாம்.

• ஒரு அறையை விட்டு வெளியேறும் பொழுது மின்விளக்கு, மின்விசிறியை அணைக்க மறக்காதீர்கள்.

• தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே என்ன கேட்கிறோம் என்று கூட அறியாமல் ‘உம்’ கொட்டாதீர்கள்.

• எங்கள் வீட்டு ஆட்களையும் உங்கள் வீட்டு ஆட்களை போல் நடத்துங்கள்.

• எங்களை பற்றி எங்கள் தாயிடம் புகார் கூறாதீர்கள்.

• உறவுகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அத்தையை பெரியம்மா என்றும், சித்தப்பாவை மாமா என்றும் அழைக்காதீர்கள்.

 

Read Previous

நாம் அனைவரும் கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு..!! சிந்தித்து செயல்படுங்கள்..!!

Read Next

தாய்மார்களே நாளைக்கு உங்க வீட்டு குட்டீஸ்க்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த சாதம் செஞ்சு கொடுங்க.. ஃபுல்லா காலி பண்ணிட்டு வந்துருவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular