• September 11, 2024

திருமணமான பெண்கள் தாம்பத்திய வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்..!!

பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது.

சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம்.

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும். ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும். பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது.

50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.

Read Previous

கரூர் | தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்..!!

Read Next

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு..!! சோகத்தில் உறவினர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular