
நமது முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து உள்ளனர். அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து நாம் பல மேம்பாடுகளை அடைந்து வருகிறோம். அவர்கள் கூறியதை பின் தொடர்வது நமது வழக்கமாக இருக்கிறது. அப்படி ஒன்றுதான் திருமணம் ஆனவுடன் மணப்பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது வலது காலை எடுத்து வைத்து வீட்டில் அடி எடுத்து வருவது.
இதை நாம் நமது வீட்டில் அதிகமாக கேட்டது விட திரைப்படங்களில் மிக அதிகமாகவே கேட்டிருப்போம். அது ஏன் என்று இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம். நமது பாதங்கள் சுத்தமாக இருந்தால் அதில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி என்றால் அழகு என்று ஒரு பொருள் இருக்கிறது. அனைத்து அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறார்.
இயற்கை கொஞ்சும் இடத்திலும் மகாலட்சுமி வாழ்கிறார். திருமணமான மணப்பெண் புகுந்த வீட்டில் வரும்போது தலைவாசலில் நெல்லை வைத்து அதனை வலது காலால் வீட்டின் உட்புறம் தள்ளிவிடும் பழக்கம் இங்கே இருக்கிறது. மணப்பெண்ணின் காலில் இருக்கும் நாராயணன் அன்னை மகாலட்சுமி ஆகியோர் இப்படி செய்வதன் மூலம் நமது வீட்டிற்குள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாகத்தான் புதிதாக திருமணமான மணப்பெண்ணை வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வர சொல்கின்றனர்.