திருப்பூர் கண்ணாங்காடு பகுதியை சேர்ந்த சோபியா (19) கடந்த டிசம்பர் 1ம் தேதி விகாஸ் கண்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சோபியா தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்துவந்த நிலையில், கருத்தரித்ததையடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என விகாஸ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




