
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சார்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் மென்பொருள் பொறியாளராய் பணியாற்றி வருகின்றார்.
பல ஆண்டுகளாக இவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில் தற்போது வரை இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து உள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இந்நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த ஸ்ரேயா ரெட்டி சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இறந்து கிடந்த ஸ்ரேயா ரெட்டி உடலினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த ஸ்ரேயா ரெட்டி திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.