
திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையா..?? நீங்கள் கடைபிடிக்க வேண்டியது இதுதான்..!!
இந்த நவீன காலகட்டத்தில் குழந்தையின்மை என்பது பலருக்கும் இருந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின்மை காரணமாக பல தம்பதிகளுக்கு விவாகரத்து கூட நடக்கிறது. குழந்தையின்மைக்கு தம்பதிகள் மட்டும் காரணம் அல்ல அவர்களின் வாழ்க்கை முறையும் உணவு பழக்க வழக்கமும் தான் முக்கியமான காரணம். திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு குழந்தை இல்லை என நினைத்து நாம் கவலைப்பட தேவையே இல்லை.
இரண்டு வருடங்கள் ஆகியும் வருடங்கள் கடந்து சென்றும் குழந்தை இல்லை என்னும்போது நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கும் ஒரு சில விஷயங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். மனதில் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களையும் கவலையையும் வைத்துக் கொள்ளாமல் முழுவதுமாக சந்தோஷமாக தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்த பலனைத் தரும். மற்றும் குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இறைச்சியை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். அதற்கு பதிலாக கீரை வகைகள் பழங்கள் முட்டை காய்கறிகள் போன்ற சத்தான உணவு பழக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கைக்கு கிடைத்தது எல்லாம் சாப்பிடக்கூடாது.சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் மது மற்றும் போதை பழக்கவழக்கங்களுக்கு ஆளாக கூடாது. தினமும் உடற்பயிற்சி செய்து தானிய வகைகள் மற்றும் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை போன்றவற்றை தினமும் எடுத்துக் கொண்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மற்றும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவில் நீண்ட நேரம் உறங்காமல் இருக்கக் கூடாது. அதிக நேரம் தூங்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் ஆரோக்கியமான அனைத்து விதமான பழக்கத்தையும் நாம் மேற்கொள்வதன் மூலம் விரைவில் அழகான குழந்தையை பெற முடியும்.