திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்திய காதலி..!! கொடூர முறையில் கொலை செய்த காதலன்..!! அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நிவேதா என்கின்ற மகள் ஒருவர் இருந்தார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை கேண்டினில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வேலைக்கு சென்ற நிவேதா வீடு திரும்பாததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தை தேடினார். ஆனால் நிவேதா அருகில் இருந்த கல்குவாரியில் சடலமாய் மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் நிவேதா வேலூர் ரங்காபுரம் மூலப்பள்ளி பகுதியை சார்ந்த ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு சமூகத்தினர் என்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதா பிரகாஷை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் ஆட்டோவில் நிவேதாவை அழைத்து சென்று கல்குவாரி உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த கொலையை மறைப்பதற்கு பிரகாஷின் நண்பன் நவீன் குமார் என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு வேலூர் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிவேதாவை பிரகாஷ் கொலை செய்ததும் அதற்கு உடனடியாக நவீன் குமார் இருந்தது. சாட்சியங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இளம் பெண்ணை திட்டமிட்டு கொலை செய்த பிரகாசிக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் நவீன் குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

30 அடி பள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்..!! தகாத உறவால் நிகழ்ந்த கொடூரம்..!! இருவர் கைது..!!

Read Next

மகளை காதலித்த 17 வயது சிறுவன்..!! கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தை.. அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular