திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்..!! ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டம் படுகோன் பரிசா பகுதியில் திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் காரில் மணமகன் மற்றும் அவரின் உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கார்  லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் மணமகன் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர். இரண்டு பேர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பினர். நல்லிரவு 12 மணி அளவில் மணமகனின் வருகைக்காக மணப்பெண் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு மணமகனின் இறப்பு செய்தி தெரிய வந்தது.

கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் மணமகன் ஆகாஷ் அஃரிவார் (வயது 25), அவரின் மூத்த சகோதரர் ஆஷிஷ் அஃரிவார் ( வயது 30), ஆஷிஷின் மகன் மயங்க் ( வயது4), கார் ஓட்டுநர் ஜெய் கரண் பகத் ( வயது 32)ஆகியோ பரிதாபமாய் உயிர் இழந்தனர்.சிஎன்ஜி டேங்க் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து  ஏற்பட்ட அடுத்த கணமே உறவினர்கள் ரவி மற்றும் ரமேஷ் ஆகிய  உறவினர்களை மீட்டுள்ளனர் பிறரை மீட்பதற்குள் நொடியில் விபத்து நடந்து முடிந்தது .இந்த விஷயம் தொடர்பாக படுகோன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

Read Previous

அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர்; பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் மரணம்..!! அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!!

Read Next

மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்..!! உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular