• September 24, 2023

திருமண வயதை அடைந்த ஆண்களா நீங்கள்..!! நீங்கள் மாற வேண்டிய நேரம் இது.. பெண்கள் யாரும் படிக்க வேண்டாம்..!!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான். அதிலும் இன்று சொந்த, பந்தங்கள் கூடி, ஊரே திரண்டு நடத்திவைக்கும் திருமணங்களில் பலரும் கணவன், மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். இது எவ்வளவு அபத்தம்? எங்கே இதன் சிக்கல் துவங்குகிறது?

திருமண வயதை அடைந்த ஆண்கள் திருமணத்துக்கு முன்பு நிச்சயமாக சில விசயங்களை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் மன உலைச்சலோடு வாழ பழக வேண்டும். அதற்குள் மூழ்கக்கூடாது. முப்பது வயது வரை கருத்தரிக்கும் தன்மை மிக ஆரோக்கியமாக இருக்கும். அந்த வயதைக் கடந்துபோகும் போது தான் எல்லாவிதமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது. டாக்டர் சரவணன் இதுகுறித்து ரொம்பவும் விளக்குகிறார். ‘’இன்றைய யூத்கள் பலருக்கும் ஏதோ ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது. இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் இமேஜையும் சிதைக்கிறது. ஆண்கள் மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள தினமும் அரைமணிநேரமாவது தங்களுக்குப் பிடித்த விசயத்தில் கவனத்தைச் செலுத்தலாம்.

மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு ரிலாக்ஸ்டாக பேச வேண்டும். முப்பது வயதைத் தாண்டி திருமணத்தை தள்ளி போடக்கூடாது. அடிக்கடி கோயிலுக்கு போய் மனம் விட்டு வழிபட வேண்டும். குட்டி, குட்டி சுற்றுலா செல்ல வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை அழித்துவிட வேண்டும்

Read Previous

பெரும் சோகம்..!! கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலி..!!

Read Next

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular