ஆடி செவ்வாய்க்கிழமையில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, சிகப்பு நிற ஆடை அணிந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை சுக்கிர ஓரையில் அம்மனை வழிபட வேண்டும். அம்மனுக்கு செந்நிறமலர்கள், வாசனை மலர்கள் சாற்றி, தேங்காய், பழம், வெற்றிலை படைத்து மங்கள கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலை கொடுக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். ரத்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.