திருமண விருந்தில் விஷம்.? 100+ உறவினர்களுக்கு வாந்தி, பேதி..!! அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா பகுதியில் அமைந்துள்ள கல்கெரா கிராமத்தில் சன்ருத்திரப்பா என்பவரின் மகளுக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது. இதற்காக ஒரு மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அப்பொழுது நண்பர்கள், உறவினர்கள் என அதிகப்படியானோர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள திருமணம் விசேஷமாய் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று இரவு விருந்து வைக்கப்பட்டது, இந்த விருந்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட உறவினர்கள் அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது, இதனால் பலரும் பரபரப்பு ஆகினர். இதனால் கல்யான வீடு   கலவரம் வீடாக மாறியது.

உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்டவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த திருமண உணவு விருந்தில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர். திருமண விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டதால் நூற்றுக்கு அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்.! கடுப்பாகி மாப்பிள்ளை செய்த படுபயங்கர கொடூரம்.!! பேரதிர்ச்சி சம்பவம்..!!

Read Next

பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular