திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க.

அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க. சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.

என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா “ஆபத்து R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு ஹேமமாலினி சொன்னாங்க.சரி நல்ல நல்ல புடவை கட்டிக்கிட்டு வந்து சொல்ராங்கலேன்னு ஒரு மெஷினே வாங்கி மாட்டினோம்.உடனே அதல சத்து இல்ல ,எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.

மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப்.”மாடில தோட்டம் போடு,உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும்,தண்ணிய கொதிக்க வச்ச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராது” ன்னுச்சு

அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம்,பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வைச்சுட்டு இப்ப திருப்பி அதையே சொல்றீங்களேடா?

முன்ன மாதிரி பேப்பர் மட்டும் படிச்சுட்டு இந்த facebook ,வாட்ஸுப் எல்லாம் மூட்ட கட்டிட்டு பழைய கருப்பு கலர் போன் ஒண்ணா வாங்கி வச்சு நிம்மதியா தூங்குங்க.

என்ன நான் சொல்றது சரிதானே?..

Read Previous

நெகட்டிவ்வும்.. பாசிட்டிவ்வும்..!! படித்ததில் மனதை கவர்ந்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பொடிசிப்பாட்டி( சிறுகதை)..!! மனதை ஈர்த்த அருமையான சிறுகதை..!! படித்ததில் கண்ணீர் வரவைத்தது..!!..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular