தற்சமயம் தமிழக முழுவதும் ஆங்காங்கே விபத்து ஏற்படுவது மிகவும் அதிகமாகி கொண்டு தான் வருகிறது, பைக் ரேஸ் என்ற பெயரில் பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து வேகமாக சென்று விரைவில் மரணத்தை தொட்டு விடுகின்றனர் அதனை தொடர்ந்து.
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் லாரி மற்றும் கார் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்துள்ளனர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என மொத்தம் 8 பேர் கொண்ட விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!!