
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது .
இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்” திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.
நடைபெறும் இடம்: பட்டாபிராமன் தரும மூர்த்தி இராவ் பகதூர் கலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி.
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று மிஷின் ஆப்ரேட்டர், வெல்டர், பிட்டர், மினி எலெக்ட்ரிசியன், ப்ரொடக்ஷன் ஆப்ரேட்டர், விற்பனை மேலாளர், ஓட்டுநர், டெவெலப்மென்ட் மேனேஜர் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம்.
கல்வி தகுதி: 8, 10, 12 ஆம் வகுப்பு பட்டப் படிப்பு ,ஐடிஐ ,பாலிடெக்னிக், பொறியியல், செவிலியர் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் முதுநிலை மேலாண்மை படித்தவர்களும் பங்கு கொள்ளலாம்.
மேலும் இந்த முகாமில் பங்கேற்போர் தங்களுடைய நான்கு புகைப்படம் ,குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ,கல்வி சான்றிதழ் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்.