
தொடர் கனமழையால் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
தென்மேற்கு வங்கக்கடலில் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மழை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது, தொடர்ந்து இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் தொடர் மாலை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டார், இந்த நிலையில் திருவாரூர் மட்டுமல்லாமல் சிவகங்கை போன்ற ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக இச்செய்தி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர், மேலும் கனமழை தாக்கம் அதிகமாக இருந்தால் விடுமுறை அளிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..!!