திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்..!!

தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை உடல்நலக் குறைவால் ஆண்டிபட்டி அருகே காலமானார். அவருக்கு வயது 53. இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராசீ தங்கதுரை சொந்த ஊரான கதிர்சிங்கபுர இல்லத்தில் உயிரிழந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் ராசீ.பிரியன், சுகதேவ் திலீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்ளிட்ட படங்களில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். சிறு வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் கொண்ட இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வெட்டி எரித்த கொடூரம்..!!

Read Next

குடிக்க பணம் கேட்ட கணவனை கொன்ற மனைவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular