திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?..

இன்னும் சில ஆண்டுகளில் திரை உலகில் இருந்து விலகப் போகிறேன் என நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். ஆனால் அவருக்கு ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ ’கழுவேத்தி மூர்க்கன்’ ’அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ மற்றும் சியான் விக்ரம் நடித்து வரும் ’வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் ’ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட துஷாரா விஜயன், தனுஷ் குறித்து பெருமையாக பல விஷயங்கள் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்,

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துஷாரா விஜயனுக்கு தற்போது 26 வயது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 9 ஆண்டுகள் அவர் நடிப்பார் என்பது அவரது இந்த பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது.

Read Previous

இரவில் நீங்கள் மொபைல் யூஸ் பண்ணுபவர்களா?..!! இது உங்களுக்கு தான்..!!

Read Next

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால்.. நல்ல வரன் கிடைக்குமாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular