திறந்த மனதுடன் இருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் கவலை கடந்து செல்லுங்கள்..!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற கவலை இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும் அதை உண்மை என்று நம்புவது முட்டாள்தனமோ அதை பொய் என்று உதாசீனப்படுத்துவதும் முட்டாள்தனம் தான். சிலர் இதை செய்யப் போகிறேன் அதை செய்யப் போகிறேன் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள் அதற்கு யாரிடம் ஆவது ஆலோசனை கேட்டு காலம் தள்ளுவார்கள்..

ஒருவர் தன் மேலதிகாரி வீட்டுக்கு போன் செய்தார் அவர் வீட்டு வேலைக்காரன் அய்யா ஒரு விபத்தில் காலை உடைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்றான். தினமும் இவர் போன் செய்து கேட்க அதே பதில் வந்தது அந்த வேலைக்காரன் கோபமானான் ஒருமுறை சொன்னால் உனக்கும் புரியாதா மறுபடியும் மறுபடி போன் செய்கிறாயே என்றான் அதற்கு அவர் அது ஒன்றும் இல்லை இந்த இனிமையான பதிலை தினம் ஒரு முறை கேட்பதில் சுகம் என்றால். இப்படி சிலருக்கு திரும்பத் திரும்ப விஷயங்களை கேட்பதை சுகமாக இருக்கும் எல்லா பிரசங்களுக்கும் போவார்கள் இவர்களுக்கு யார் குரலாவது கேட்டுக் கொண்டே இருந்தாலே தங்கள் வாழ்க்கை சீர் படும் என்று நம்புவார்கள். அதற்காக அறிவுரை செய்பவரையெல்லாம் எதிரிகளாக பார்க்க தேவையில்லை உங்களுக்கு அறிவுரை சொல்பவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு. சில பெரியவர்கள் சிகரெட் பிடிப்பார்கள் ஆனால் தங்கள் பிள்ளையிடம் சிகரெட் பிடிக்காது என்று அறிவுரை சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள் உங்கள் அப்பா உங்களுக்காக எதை எதையோ கொடுத்தபோது அதையெல்லாம் அவர் தனக்கு வைத்துக் கொண்டு இருக்கிறாரா என்று நீங்கள் கவலைப்பட்டீர்களா அறிவுரை உங்களுக்கு கொடுக்கப்பட்டது அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். எந்த அறிவுரையானாலும் அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதா? என்று மட்டும் பாருங்கள் யாரோ நமக்கு எதிரில் உட்கார்ந்த நமக்காக ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே அது என்னவென்று தான் பார்ப்போம் என்று திறந்த மனதுடன் அறிவுறுத்தல்களை அணுகுங்கள் திறந்த மனதுடன் இருப்பது தான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்…!!

Read Previous

ஒரு சக்திவாய்ந்த தொழில்முனைவோராக ஆகுவதற்கு பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிகள்..!!(படித்ததில் பிடித்தது..)

Read Next

உங்க வீட்டு சமையலறையில் எக்காரணத்தைக் கொண்டும் இந்த தவறை மட்டும் ஒருபோதும் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular