• September 12, 2024

திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!! அரசு தேர்வுகள் இயக்ககம்..!!

தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பவை “வருகின்ற 21/7/2014 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக முதலமைச்சர் திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024 -25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு என்ற இணையதளத்தின் மூலமாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2004 வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட உள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசம் 03/07/2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை தாங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து அதிக எண்ணிக்கையில் உள்ள மாணவர்களை திட்டத்தில் விண்ணப்பித்திட வழி வகுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது”, என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

கொடூரத்தின் உச்சம்..!! அவ இல்ல அவ பையன் தான் இருந்தான்..!! கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய பெண் தலைமறைவு..!!

Read Next

கஞ்சா விற்பனை செய்த தலைமை செயலகம் பெண் ஊழியர் அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular