‘தில்லானா மோகனாம்பாள்’ நாதஸ்வர கலைஞர் காலமானார்..!!

சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ இதில் நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள். இந்தப் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாதஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பொன்னுசாமி (90) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு (வீடியோ)..!!

Read Next

தென்னாப்பிரிக்காவில் சோகம்..!! லிஃப்ட் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular