
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவை வழிநடத்த துவங்கி ஐந்தாண்டு காலம் நிறைவடைந்து உள்ளது.
திமுகவில் தலைமை ஏற்று 5 ஆண்டுகள் நிறைவு செய்ததை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறி உள்ளார்.
“தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும், நெஞ்சிலும் அரை நூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்க துவங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி. காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புகள் தான். உங்களின் ஆதரவு இருக்கும் வரை எந்த களத்திலும் உங்களில் ஒருவனாக என்னால் வெற்றி பெற்று காட்ட முடியும். நமது மாநிலத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதுமான விடியலை தருவோம், மதவாத இருட்டை விரட்டி அடிப்போம். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியை கொடுப்போம்”, என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.