
தீபாவளியன்று சோகம்..!! அதிக மதுபோதையில் இளைஞர் உயிரிழப்பு..!!
கார்த்திக் (வயது 28) என்பவர் புதுக்கோட்டை திருமயம் அருகே லெம்பலக்குடியை சேர்ந்தவர். இவர் குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர். இந்த நிலையில் நேற்று தீபாவளியை கொண்டாடும் விதமாக அதிக அளவில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்துள்ளார். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்க்கையில் அவர் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கார்த்தியின் மனைவி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.