தீபாவளியையொட்டி முன்கூட்டியே ரூ.1000 வழங்க ஏற்பாடு – குடும்ப தலைவிகள் ஹாப்பி..!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 உரிமைத்தொகை:

தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு தற்போது வரையிலும் இரண்டு மாதத்திற்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம்15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்பாகவே அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது.

ஆனால், இந்த மாதம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மகளிரின் குடும்ப சூழ்நிலை காரணமாக முன்கூட்டியே ரூ. 1000 வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்த மாதம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதிகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே ரூ. 1000 வழங்கப்படுவதால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மேல்முறையீடு செய்த தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கும் இந்த மாதத்தில் இருந்து ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நடிகர் விஜய்யின் அமைதி தான் அவருக்கான ஆயுதம் – அர்ஜுன் பேச்சு..!!

Read Next

திருமணத்திற்கு பிறகு சேது கெட்டப்பிற்கு மாறிய அசோக் செல்வன்..!! மனைவியுடன் வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular