பண்டிகை நாட்களில் ரயில்களில் முன்பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டால் மட்டும்தான் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும் மேலும் கடைசி நேரத்தில் முன் பதிவு செய்வது என்பது இயலாத செயலாகும், பலரும் தீபாவளிக்கு முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர் மிக விரைவில் ரயில்வே துறை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது…
தீபாவளி அக்டோபர் 31 வருவதை ஒட்டி இதற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு சீட்டு முடிந்தது, இதனால் சிறப்புரையில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர் வழக்கம்போல் கடைசி நேரத்தில் அறிவிக்காமல் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதற்கான கோரிக்கையை ஏற்று மிக விரைவில் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய அரசு ரயில்வே தெரிவித்துள்ளது, மேலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்பு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..!!




