தீபாவளி பண்டிகைக்கு அட்டகாசமான போனஸுடன் 1 வாரம் விடுமுறை – ஊழியர்கள் ஹாப்பி..!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் அட்டகாசமான போனஸுடன் 1 வாரம் விடுமுறையை அறிவித்துள்ளனர்.

தீபாவளி விடுமுறை:

நவராத்திரி பண்டிகை முடிவடைந்து இன்னும் பத்து நாட்களில் தீபாவளி பண்டிகையும் வரவிருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என ஊழியர்களின் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை வழங்கத் துவங்கிவிட்டனர். அந்த வகையில், KPMG, Deloitte, Adobe, We Work, பிசிக்கல் வல்ஹல்லா, விங்கிஃபை மற்றும் பவர் ப்ளே ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பான சலுகையை அறிவித்துள்ளனர்.

இது போக, பல நிறுவனங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை சேர்க்காமல் ஒருவாரம் தீபாவளிக்கு விடுமுறையை அறிவித்துள்ளனர். மேலும், KPMG நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையொட்டி இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஒரு வாரம் தீபாவளி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பான போனஸூம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Previous

ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் இதோ..!!

Read Next

துளசி செடியை இந்த திசையில் வைக்காதீர்கள்..!! எந்த திசை தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular