இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரவுள்ளது. இது குறித்து வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருவதற்காக பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். இந்த ரயில்வேவில் முன்பதிவு இன்று முதல் ஆரம்பியுள்ளது என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்று வருகின்றது. இதனால் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பார்கள். அதன் அடிப்படையில் அக்டோபர் 28ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் அக்டோபர் 29ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், அக்டோபர் 30-ல் பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறுநாளும் அவனா சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பது “பெரும்பாலான பயணியர் இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றன 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இந்த இணையத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தீபாவளி முன்பதிவுகளை கணக்கிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரயில்வே மண்டலம் முடிவு செய்யும்”, என அவர் தெரிவித்துள்ளார்.