
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கார் லாரி மீது மோதி தீ பிடித்த விபத்தில் நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாய் உயிர் இழந்தனர். இது தொடர்பாக இறந்தவர்களை அடையாளம் காணும் பணி மும்முறமாக நடைபெற்று வருகின்றது.
உத்திரபிரதேசம் மாநிலம் சஹரான்பூரில் உள்ள டேராடூன்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4 பேருடன் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் தீ பற்றி எரிந்துள்ளது.இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆயினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதனை தொடர்ந்து கேஸ் கேட் இயந்திரத்தை பயன்படுத்தி காரில் உள்ள உடல்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கண்ணாடி மூடி இருந்ததால் விபத்தில் சிக்கியவுடன் உடனடியாக அவர்களால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று தீயணைப்புத்துறைனா தெரிவித்துள்ளனர்.