பொதுவாக நம்மில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அதில் மிகுதி இல்லையே என புலம்புவார்கள்.
இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டிலுள்ளவர்கள் அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு தகுதி மீறி நிறைய கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். இதனை எப்படி சரிச் செய்வது என தெரியாமல் புலம்பி திரிவார்கள்.
இப்படியான நேரங்களில் நமக்கு கைக்கொடுக்கும் ஒரே வழி தெய்வம் தான். நம்மாள் முடிந்தவரை பணத்தை செலுத்த முயற்சிப்போம், முடியாத பட்சத்தில் இறைவனிடம் வேண்டுதல்களை அடுக்குவோம்.
இவை கடனில் இருந்து நிதி நிவாரணத்திற்கான கதவுகளைத் திறப்பதுடன், கிரகங்களின் பெயர்ச்சியை நமக்கு சாதகமாக்கும் வேலையை செய்கிறது.
அப்படியாயின் கடன்களை இலகுவாக அடைப்பதற்கு என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கடனில் இருந்து விடுபட பரிகாரங்கள்
1. கடன் சுமை அதிகரித்து விட்டால் விநாயகருக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்து வந்தால் கடன் குறையும், பூஜை நேரங்களில் கணேஷ் சாலிசா அல்லது உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை கூற வேண்டும்.
2. தினமும் காலையில் சூரியன் வந்த பின்னர் ஒரு கிண்ணம் தண்ணீர் எடுத்து சூரியனை வழங்க வேண்டும். அத்துடன் உயிர் கொடுக்கும் ஆற்றலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். அத்துடன் நிதி ஸ்திரத்தன்மையை ஈர்க்கிறது.
3. உங்களின் ஜோதிடரிடம் சென்று உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினக் கற்களின் நிறம் அல்லது ரத்தினக்கற்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். உதாரணமாக, மஞ்சள் சபையர் (வியாழனுடன் தொடர்புடையது) மற்றும் சிவப்பு பவளம் (செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது) உள்ளிட்டவைகளை கூறலாம். இப்படி செய்து வந்தல் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் குறையும்.