தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பதுதான் கடன் இந்த கடனை தீர்ப்பதற்காக மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் தனது வீடு உறவுகளை துறந்து பல்வேறு இடங்களில்உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னம்புத்தூரில் ஸ்ரீநிதிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை பிரம்மதேவரும். நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு சென்றுள்ளனர் என்று ஐதீகம். இந்த கோயிலில் ஸ்ரீ நிதீஸ்வரராக எழுந்தருளியுள்ள சிவபெருமான் பிரம்மஹஸ்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த ஈஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்ச வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற பூக்களை வைத்து அர்ச்சனை செய்து 5 நெய் தீபம் ஏற்றி ஐந்து முறை ஆலயத்தை வழி வலம் வந்தால் பாதிப்புகள் நீங்கும் என கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவி வரும் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம். மேலும் கடன் தொல்லையில் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி உள்ளிட்ட நாட்களில் இந்த சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை. இதனை தொடர்ந்து வாழ்க்கையில் மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம் ,குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.