தீராத சளி தொல்லையை தீர்க்கும் கற்பூரவள்ளி இலை ரசம் வைப்பது எப்படி.?

தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையால் சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்ய கற்பூரவள்ளி இலை ரசம் சிறந்த தீர்வாக அமையும்.

சளித்தொல்லையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

  • மூச்சு விடுதல் சிரமம்
  • தொண்டை வலி,
  • மூக்கடைப்பு
  • தொண்டைப்புண்
  • நெஞ்சு அடைத்தல்
  • தலைவலி
  • வறட்டு இருமல்
  • உடல் சோர்வு

சளி பாதிப்பை சரி செய்யும் எளிய வழி

தேவையான பொருட்கள்

  • கற்பூரவள்ளி இலை 5
  • கரு மிளகு 1 1/2 தேக்கரண்டி
  • புளி எலுமிச்சை அளவு
  • தக்காளி இரண்டு
  • பச்சை மிளகாய் ஒன்று
  • வரமிளகாய் இரண்டு
  • கல் உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
  • பூண்டு 8 பல்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  • கடுகு 1/4 தேக்கரண்டி
  • சீரகம் 1/4 கரண்டி
  • கருவேப்பிலை ஒரு கொத்து
  • பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். அவை நன்கு ஊறி வந்ததும் புளிக்கரைசலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் நான்கு தக்காளி பழத்தை கையால் பிழிந்து விடவும்.

பின்னர் சிறிய சைஸில் கற்பூரவள்ளி இலை ஐந்து எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு உப்பு மஞ்சள் தூள், மல்லித்தலை மற்றும் இடித்த பூண்டு சேர்த்து கலக்கி விடவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு சிறிதளவு மிளகாய் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் கால் தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய  விட வேண்டும்.

பின்னர் இரண்டு வர மிளகாய் இரண்டு பச்சை மிளகாய் ஒரு கரு ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கரைத்து வைத்துள்ள கற்பூரவள்ளி புளி கரைசலை அதில் சேர்க்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள மிளகு பொடியை அதில் சேர்த்து கலந்து விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இதை கிளாஸில் ஊற்றி வெதுவெதுப்பான சூட்டில் பாருக்கலாம் அல்லது சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும் சரி எப்படி சாப்பிட்டாலும் உடலில் உள்ள கெட்டி சளி முழுவதும் கரைந்து மூக்கின் வழியே வந்துவிடும்.

Read Previous

கல்லீரலை காக்கும் அற்புத பானம்..!! வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம்..!!

Read Next

வீட்டில் இருந்தபடியே சிறுநீரக கல்லை வெளியேற்றலாம்..!! தினமும் அரைக்கப் இதை குடித்தாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular