தீராத நெஞ்சு சளியை போக்கும் அற்புத கசாயம்..!! வீட்டில் செய்வது எப்படி..?

மழைக்காலம் தொடங்கி விட்டாலே உடனே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடுகின்றன. இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டு விட்டால் அவை நாளடைவில் தீராத  நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடுகின்றது.

இதை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது மிக நன்று.

நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு

  • ஆஸ்துமா
  • மூக்கில் அலர்ஜி
  • சைனஸ் பாதிப்பு
  • மூச்சிரைப்பு
  • மூக்கு ஒழுகுதல்
  • மூக்கடைப்பு
  • மூச்சு விடுதலின் சிரமம்
  • தொண்டை வலி
  • தொண்டை புண்

நெஞ்சு சளிக்கான அறிகுறி

  • அதிக சளி
  • வறட்டு இருமல்
  • தலைபாரம்
  • நெஞ்சு எரிச்சல்
  • தொண்டை எரிச்சல்
  • சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
  • சளியில் ரத்தம் கலந்து வருதல்

நெஞ்சு சளி பாதிப்பு நீங்க இயற்கை வைத்தியம்

தேவையான பொருட்கள்

  1. இஞ்சி மிளகு
  2. துளசி,
  3. பூண்டு,
  4. ஓமம்
  5. வெற்றிலை

செய்முறை

உரலில் ஆறு மிளகு சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு சிறு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அவை சூடானதும் இடித்த இஞ்சி, பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும் பிறகு கால் தேக்கரண்டி ஓமம் சேர்க்கவும் அடுத்த சில துளசி இலை ஒரு வெற்றிலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகினால் நெஞ்சில் தேங்கிக் கிடந்த நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து மலம் மூலம் வெளியேறும்.

Read Previous

தீராத மூட்டு வலிக்கு பாட்டி வைத்தியம் செய்யும் எளிய முறை இதோ..!!

Read Next

மலச்சிக்கலை சரி செய்யும் பாட்டி வைத்தியம்..!!10 நிமிடத்தில் ரிசல்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular