தீராத நோய் தீர இந்த 3 பொருளை தலையை சுற்றி தூர போடுங்கள்.. எல்லாமே சரியா போய்டும்..!!

Oplus_131072

 

வந்த நோயையும், வரவிருக்கும் நோயையும் விரட்டி அடிக்க கூடிய தன்மை மருத்துவத்திற்கு இருந்தாலும், சில நோய்களுக்கு என்னவோ போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்படி நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட நோயைக் கூட விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல் இறை சக்திக்கு உண்டு. இந்த இறை சக்தியின் மூலம் பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்வுக்கு எளிதாக வந்துள்ளன. அந்த வகையில் தீர முடியாத சில வித்தியாசமான பிரச்சனைகளையும் தீர்க்க என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சிலருக்கு உடலில் திடீரென கட்டிகள் தோன்றும். எதற்கு வந்தது என்ன என்றே தெரியாமல் இருக்கும். இதற்காக மருத்துவம் செய்து கொண்டாலும் ஒன்றும் இல்லை என்று கூறிவிடுவார்கள். இப்படிப்பட்ட கட்டிகளை கூட கரைக்கக் கூடிய சக்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய இந்த சில பொருட்களில் ஒளிந்து கொண்டுள்ளது.

பழங்கால முறைப்படி உப்பையும், மிளகையும் கையில் வைத்துக் கொண்டு தலையைச் சுற்றி திருஷ்டி கழிப்பது உண்டு. இதனால் உடலில் இருக்கக்கூடிய கட்டிகள் கரைந்து போகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. அதே போலவே இந்த பரிகாரமும் அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நோய்வாய்ப்பட்ட நபரை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

இந்த ஒரு பரிகாரத்தை நம்பிக்கையுடனும், ஆலயத்திலும் செய்வது சிறப்பான பலன்களை தரும் எனவே வீட்டில் வைத்து செய்ய வேண்டாம். நோய்வாய்ப் பட்டவரை ஆலயத்தில் கிழக்கு நோக்கி அமர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு உங்களுடைய கையில் சிறிதளவு துவரம் பருப்பு, ரெண்டு வரமிளகாய், கொஞ்சம் புளி ஆகிய இந்த மூன்று பொருட்களையும் வைத்து நன்கு இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள்.

பின்னர் பிரச்சினைக்குரிய நபரின் தலையை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வலம் இருந்து இடப்புறமாக மும்முறையும், இடமிருந்தும் வலப்புறமாக மும்முறையும் இது போல சுற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அவர்களை மூன்று முறை தூ தூ என்று துப்பு சொல்லுங்கள். பின்பு அதை அருகில் இருக்கும் நீரிலோ அல்லது நெருப்பிலோ போட்டு கரைத்து விட வேண்டும். இதனால் உடலில் ஏற்படக்கூடிய துன்பங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

துவரை, புளி மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவை எப்படி எரிந்து பொசுங்கி போகிறதோ, அதே போல உடலில் ஏற்படக்கூடிய கட்டிகள், நோய்கள், இனம் புரியாத வியாதிகள், என்னவென்றே தெரியாத உடல் பிரச்சனைகள் கூட மாயமாய் மறைந்து போவதாக பலரும் நம்பிக்கையுடன் இதனை செய்து வருகின்றனர். சிலருக்கு சீசன்களில் வரக்கூடிய பிரச்சனைகள் என்று ஒன்று இருக்கும். வெயில் காலத்தில் கட்டிகளும், குளிர்காலத்தில் வெடிப்புகளும் வரக்கூடும். இது போல இருக்கக்கூடிய சீதோஷ்ண நிலையால் வரக்கூடிய நோய்களையும், வியாதிகளையும் கூட இப்பரிகாரம் செய்யும் பொழுது ரொம்ப எளிதாக தீர்த்துக் கொள்ளலாம். எந்த ஒரு நோயும் தீர்வதற்கு, முதலில் நம்முடைய உடலை குளிர்ச்சியாகவும், உஷ்ணம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீர் ஒன்றே பிரதானமாக இருக்கிறது எனவே எந்த அளவிற்கு ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு குடியுங்கள்.

Read Previous

நாட்டு சர்க்கரை எந்த நோயையெல்லாம் தடுக்கும் தெரியுமா..??

Read Next

உடைந்து நொறுங்கிய எலும்புகளை ஒரே வாரத்தில் ஒட்ட வைக்கும் மூலிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular