“தீராத முதுகு வலியால் அவதியா.?”இதை மட்டும் செய்ங்க.!! வலி பறந்து போகும்.!!

 

இந்த நவீன காலகட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை இந்த முதுகு வலி பிரச்சனை தான். இந்த முதுகு வலி அதிகமாக நாம் வேலை பார்ப்பது நாள் முழுவதும் உட்கார்ந்து படி வேலை பார்ப்பது, மற்றும் அதிகமான வெயிட் களை தூக்குவது, உடல் எடை கூடுதல், மற்றும் சிசேரியன் செய்யும்பொழுது முதுகு தண்டுவடத்தில் ஊசி போடுவது போன்ற பல காரணங்களால் இந்த முதுகு வலி ஏற்படுகிறது. இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி மிகவும் அவதிப்படுகின்றனர்.

பெண்களுக்கு ஹைஹில் செருப்பு அணிவது சிசேரியன் மற்றும் உள்ளாடையான பிரேசியர் கரெக்டான அளவு தேர்ந்தெடுத்து அணியாமல் தப்பான அளவை தேர்ந்தெடுத்து அணிவது போன்ற முக்கிய காரணங்களாலும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு வலியை போக்க வெந்நீர் ஒத்தடம் சிறந்த ஒரு வலி நிவாரணி ஆகும். உடலில் சத்து குறைபாடு இருந்தாலும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புண்டு. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்துக்களான கீரைகள் பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை அன்றாட உணவில் நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் குறைபாட்டால் கூட முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கால்சியம் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான மீன் கீரைகள் பால் போன்ற பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு நாளைக்கு தேவையான அளவிற்கு நீர் அருந்துவது மிகவும் முக்கியமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.

Read Previous

நீண்ட நாள் வாழ ஆசையா? அப்போ இத கட்டாயமா படிங்க..!!

Read Next

சத்தான வேர்க்கடலை முலைப்பயிறு சாலட் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular