தீராத மூட்டுவலியை சரி செய்யும் முடக்கத்தான் கீரை எண்ணெய்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த வேண்டும். அதுவும் இயற்கையான முறையில் குணப்படுத்திக் கொண்டால் அது மிகவும் நன்று.

மூட்டு வலி ஏற்பட முக்கிய காரணம்

  • ஆரோக்யமற்ற உணவு
  • ஜவ்வு தேய்மானம் ஆகுதல்
  • எலும்பு தேய்மானம் ஆகுதல்
  • வயது மூப்பு
  • வேலை பளு
  • உடல் பருமன் இவை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இதற்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பதற்கு மூலம் நல்ல  பலன்கள் கிடைக்கும்

தேவையான பொருட்கள்

  1. முடக்கத்தான் கீரை
  2. நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கப் முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள முடக்கத்தான் கீரை சேர்த்து ஒரு  அரைப்பு அரைக்கவும் பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை விழுதை சேர்த்து கிளறி கொள்ளவும். பிறகு அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

முடக்கத்தான் கீரையின் சாறு நல்லெண்ணெயில் கலந்து நன்கு கொதித்து வரவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இதை மூட்டுகளில் மேல் தினமும் தடவி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமடையும்.

Read Previous

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

Read Next

உடல் எடையை ஒரே வாரத்தில் கரைக்கும் அற்புத பானம்..!! வீட்டில் இருந்தபடியே செய்யலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular