தற்பொழுது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் சந்தித்து வரும் மிகப்பெரும் பிரச்சனையாய் இருப்பது மூட்டு வலி. மேலும் நம் முன்னோர்கள் காலத்தில் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றாய் இருந்து வந்தது, ஆனால் தற்பொழுது குழந்தைகள் பெரியவர்கள் நடுத்தர வயதினர் என்று அனைவருக்கும் உள்ளது.
இதற்கு காரணம் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்கள் நாம் அன்றாட வாழ்க்கை முறை நாளும் பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வருகின்றோம். அதில் மூட்டு வலி இளைஞர்களை மிகவும் பாதிக்கின்றது. மூட்டு வலிக்காக ஆங்கில மருந்துகள் பல இருந்து வருகின்றது. அதனை எடுத்துக் கொள்ளும் பொழுது பக்க விளைவுகளை நாம் சந்திக்க ஏற்படும் நேரிடும்.
எனவே நம் பாரம்பரிய மருத்துவமான சித்த வைத்தியபடி பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது மூட்டு வலி பாதிப்பு குறைகின்றது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.
தேவையான பொருட்கள்
- பிரண்டை -அரை கிலோ
- பூண்டு- 15
- வர மிளகாய்- 3
- புளி- ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயத்தூள் -கால் தேக்கரண்டி
- நல்லெண்ணெய்- கால் கப்
- கடுகு- ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் அரை கிலோ பிரண்டையை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த பூண்டு பொறிந்ததும், பிரண்டையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து எடுத்த பிரண்டை மற்றும் பூண்டு சேர்த்து புளி, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்பு அதை கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி வதக்கி காற்று போகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிரண்டை ,நல்லெண்ணெய் துவையல் மூட்டு வலி மட்டும் இன்றி எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.