திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லமுத்துபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகள் யாகவி இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஏ படித்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்த யாகவி அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர் சிகிச்சை எடுத்தும் வயிற்று வலி குணமாகாததால் மனவேதனையில் இருந்த யாகவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவருடைய தந்தை புண்ணியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் யாகவியின் உடலை கைப்பற்றிய நவல்பட்டு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.