Oplus_131072
தீரா நோய்களைத் தீர்க்கும் முருங்கை வேர், பட்டை…
முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும்.
சந்தனம், தேற்றான்கொட்டை, பூமிச் சர்க்கரைக் கிழங்கு, பூனைக்காலி விதை மற்றும் முருங்கை வேர்ப்பட்டை சம அளவு எடுத்துத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த கலவையோடு சர்க்கரை சேர்த்து 12 நாள்கள் குடித்து வந்தால் உடல்சூடு தணியும். இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்திப் பொடித்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பட்டை, மூக்கிரட்டை வேர், ஊமத்தை இலை, பூண்டு சம அளவு எடுத்து அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட்டால் வீக்கம் கரையும். வலி குறையும். மூட்டு தொடர்பான வாய்வு நோயும் குணமாகும்…




