
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருணகிரி சத்திரம் கிராமம் கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தீயணைப்பு துறையில் துணை அலுவலராய் பணிபுரிந்து வருகிறார். சரவணன் என் மனைவி ஜெயலட்சுமி இன்று ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமிசமையல் செய்வதற்காக மண்ணெண்னை அடுப்பினை தயார் செய்து உள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தினால் ஜெயலட்சுமி பரிதாபமாய் உயிரிழந்து விட்டார், அவரை காப்பாற்ற முயற்சி செய்த கணவர் சரவணன் படுகாயம் அடைந்தார்.
வீட்டில் இருந்து கரும்புகை மற்றும் அவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தீயணைப்பு வீரரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
ஆரணி காவல்துறையினர் ஜெயலட்சுமி உடலினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.