துணிச்சல் மிக்க கழுதைப்புலிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் படித்ததில் பிடித்தது..!!

தோற்றத்தில் நாயைப் போலவும் நரியை போலவும் காணப்படும் வினோதமான ஒரு விலங்கு தான் தமிழில் கழுதைப்புலி என்றும் ஆங்கிலத்தில் ஹைனா என்றும் அழைக்கப்படுகிறது…

இவை கூட்டமாக இருந்தால் ஒரு சிங்கத்தையே கொல்லும் அளவிற்கு துணிச்சல் மிக்க விலங்கு..

கழுதைப்புலிகள் மையோசின் யுகத்தில் யுரேசியா கண்டத்தில் அதாவது ஆசியா மற்றும் ஐரோப்பா என இரு கண்டங்களுக்கும் இணைந்து பெரு நிலப்பகுதியில் அடர்ந்த காடுகளில் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நாய் போன்ற ஒரு மூதாதையரிடம் இருந்து தோன்றிய ஒரு உயிரினம் என்று கருதப்படுகிறது..

கழுதை புலியானது பூனை குடும்பத்தை சார்ந்தவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் நடத்தையில் நாய் குடும்பத்தை ஒத்திருக்கின்றன இவை அனைத்துண்ணி விலங்காகும்

கழுதைப்புலிகள் தங்கள் நகங்களை பயன்படுத்தாமல் தங்கள் கூர்மையான பற்களை பயன்படுத்தி தமது உணவை வேட்டையாடிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை இவை வேட்டையாடிய உணவை உண்பதோடு மட்டுமின்றி அவற்றை சேமித்து வைத்தும் பயன்படுத்துகின்றன..
திமிங்கலம் யானை சிங்கம் முதலான விலங்குகளை போல கழுதை புலிகளின் கூட்டத்திற்கு ஒரு பெண் கழுதை புலியை தலைமை பொறுப்பை ஏற்றுக் வழி நடத்துகிறது…

கழுதைப்புலி உடலின் மேற்பகுதியானது சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும்

கழுதைப்புலியின் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் அடர்த்தியான வரி கோடுகள் காணப்படும் ஆண் கழுதை புலிகள் பெண் கழுதைப்புலிகள் விட உருவத்தில் பெரிதாக காணப்படுகின்றன கழுதைப்புலிகளின் கால்களில் நான்கு விரல்கள் காணப்படுகின்றன..

பொதுவாக இவை ஒரே இடத்தில் வசிப்பதில்லை நீர் நிலைகளை தேடி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் தன்மை கொண்டவை இவற்றின் தோற்றம் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும் இவை தனது எதிரிகளை பயமுறுத்த அடர்த்தியான உடல் முடிகளை செங்குத்தாக தூக்கி நிறுத்தும் ஆற்றல் உடையவை இவை அடர்த்தியான சற்றே நீண்ட வாளை கொண்டவை..

கழுதைப்புலிகள் 88 நாட்கள் முதல் 92 நாட்கள் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை உடையவை பிறந்த குட்டிகளை ஆண் கழுதைப்புலிகள் பெண் கழுதைப்புலிகள் சேர்ந்து பராமரித்து காப்பாற்றும், இவை பொதுவாக ஒன்று முதல் ஐந்து குட்டிகளைஈனும் குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பின்னர் மாமிச உணவை சாப்பிட தொடங்கும்..

கழுதைப்புலிகள் இந்தியா ஆப்பிரிக்கா பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுகின்றன புள்ளி கழுதைப்புலிகள், அடர் பழுப்பு நிற கழுதைப்புலிகள், ஆர்ட்வுல்ப் கழுதைப்புலிகள், வரி கழுதை புலிகள் என நான்கு வகையான கழுதைப்புலிகள் உள்ளன..

அடர்த்தியான கருப்பு நிறத்தில் ஏழு முதல் ஒன்பது வரை கோடுகள் கொண்ட வரி கழுதைப்புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன இத்தகைய கழுதைப்புலிகள் தமிழ்நாட்டில் முதுமலை சத்தியமங்கலம் முதலான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது..

இவை கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் சரணாலத்திலும் மத்திய பிரதேசத்தில் சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயம் குஜராத்தில் வெலவாடார் தேசிய பூங்காவிலும் காணப்படுகிறது .

ஒரு வகையான வினோதமான ஒலியெழுப்பி தங்கள் குழுவினருக்கு செய்திகளை இவை பரிமாற்றிக்கொள்ளும். ஆற்றல் படைத்தவை இவற்றின் குரல் சுமார் ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கரமாக எதிரொலிப்பதால் இவற்றின் குரலை கேட்பதற்கு அச்சத்தையும் திகழையும் ஏற்படுத்தும்..!!

Read Previous

ஷாக் : நீங்க பாக்கெட் பாலை கொதிக்க வைத்து குடிப்பவரா அப்ப இது தெரிஞ்சுக்கோங்க ‌..!!

Read Next

சார்ஜ் பெர்னெட்சா கூறிய வாழ்வின் முன்னேற்றத்திற்கான 15 பொன்மொழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular