
ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் ஹனுமா விஹாரி தனது வலது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்ட பின்பும் தொடர்ந்து இடது கையில் பேட்டிங் செய்துள்ளார்…!
இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச அணிகள் மோதின. இதில் மத்தியபிரதேச பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் வீசிய பந்து ஆந்திரபிரதேச கேப்டனும், 2021 ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடிய ஹனுமா விஹாரியின் வலது மணிக்கட்டில் பலமாக்கப்பட்டது. இருந்தும் விஹாரி, தனது இடது கையினால் தொடர்ந்து பேட்டிங் செய்துள்ளார் .
இதை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பலரும் வெகுவாக பாராட்டி வந்தனர். அன்றைய நாள் முடிவில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரின் வலது மணிக்கட்டு உடைந்து இருந்தது சோகத்தையும் அணிக்காக அவரின் அர்ப்பணிப்பையும் காட்டுகின்றது.