உங்கள் அழகான துணியில் சாயமுட்டி உள்ளதா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் சாயும் காணாமல் போய்விடும்..
துணிகளை துவைக்கும் போது மற்ற துணிகளில் உள்ள சாயம் ஒட்டிக் கொள்ளும் குறிப்பாக வெளிர்நிற துணிகளில் சாயம் ஒட்டினால் அதை அகற்றுவது கடினமாக இருக்கும் ஆகையால் துணிகளில் சாயம் ஒட்டினால் அதை எப்படி எளிதில் அகற்றலாம் என்று பார்ப்போம், தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்து இதில் சாயம் படிந்த துணியை அரை மணி நேரம் ஊற வைத்து துவைத்தால் சாயம் நீங்கிவிடும், சாய கரையை அகற்ற எலுமிச்சை சாறு சிறந்து விளங்கும் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சை சாறில் சம அளவில் தண்ணீர் கலந்து சாயம் உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து பத்து முதல் 15 நிமிடம் உலரவிட்டு துவைத்தால் சாய கரை நீங்கும், ஹைட்ரஜன் பராக்சைடு சாயக்கரையின் மீது தேய்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைத்து விருதுப்பான நீரில் கழுவினால் சாய கரை மறையும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் என்பதால் பாதுகாப்பாக கையாள வேண்டும், சோள மாவு துணிகளில் உள்ள கறைகளை உறிஞ்சும் என்பதால் இதை பயன்படுத்தலாம் சோழமாவை தண்ணீரில் பேஸ்ட் பதத்திற்கு கலந்து சாயம் உள்ள இடத்தில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து துவைத்தால் சாயக்கரை நீங்கும், புது துணிகளை துவைக்கும் போது சாயம் வெளியேறும் என்பதால் பழைய துணிகளை புது துணியுடன் துவைக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்…!!!




