
#துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று ஒவ்வொரு நாளும் உணர்த்தி செல்கிறது..
இந்த வாழ்க்கை…
எனக்கு அம்மா அப்பா கிடையாது எங்க அண்ணன் தம்பி அவர்கள்தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.,
வாழ்க்கை கொஞ்சம் காலம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது எனது கணவருக்கு ஒரு ஆறு மாதம் வேலை இல்லாமல் போய் விட்டது..
அதை காரணம் காட்டி என் அண்ணன் தம்பி அவர்கள் உன் கணவருக்கு வேலை இல்லை பொறுப்பில்லை என்று சொல்லி விவகாரத்து வாங்க வேண்டும் என்று கூறினார்கள்..
இல்லைன்னா அவருக்கு பொறுப்பு வந்துவிடும் வேலை கிடைத்து விடும் நல்லா வாழலாம் என்று சொன்னேன்..
இனிமேல் அவனுக்கு எங்க பொறுப்பு வரப்போகுது வேலையும் இல்லை ஒன்னும் இல்லை அவனை விவகாரத்து செய்து விடு என்று வற்புறுத்தி கூறினார்கள்…
நமக்கு இரண்டு வீடு இருக்கு ஒரு வீட்டில் நீ வசித்துக் கொள் என்று அண்ணன் தம்பி சொல்ல சரி நம்ம அண்ணன் தம்பி நமக்கு கடைசி வரைக்கும் கூட இருப்பார்கள் என்று சரி என்று விவகாரத்து வாங்கி விட்டேன்
ஒரு பக்கம் தன் வீட்டுக்காரரோடு வாழ வேண்டும் என்று இருந்தது இன்னொரு பக்கம் சரி அண்ணன் தம்பி இருக்கிறார்கள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்து விட்டேன்..
பேசுவோம் சந்தோஷமா சிரிப்போம் ஜாலியா தான் இருந்தோம் ஆனால் இரவில் மட்டும் அந்தத் தேடல் இருந்து கொண்டே இருந்தது.
என்னுடைய அண்ணன் தம்பி அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது அவர்களுடைய நடவடிக்கை வேற மாதிரியா இருந்தது
அவர்கள் வெளியே போ என்று சொல்வதற்கு நானே நான் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன்.
வீட்டை விட்டு வெளியே வரும் போது கூட ஏன் போகிறாய் இரு என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..
10 வருடம் கழித்து சரி கணவருடன் வாழலாம் என்று நினைக்கும் போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது..
நான் அண்ணன் தம்பி பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ என்று எனக்கு இப்போது தோன்றுகிறது
நான் இப்போது சம்பாதிக்கிறேன் ஆனால் சம்பாதித்து என்ன பயன்?? தனிமை தனிமை தானே
தனிமையில் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று தனிமையில் வாழ்பவர்கள் தான் தெரியும்.. நான் ஒவ்வொரு நாளும் அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு முடிவெடுக்கும் போது ஆயிரம் முறை யோசிங்கள் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் முடிவெடுத்து விட்டார்கள்..
அப்படி முடிவு எடுத்து விட்டால் என்னை போல் நீங்களும் தனிமரமாக தான் வாழ வேண்டும்….
துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு உணர்த்தி செல்கிறது இந்த வாழ்க்கை..
#அண்ணன் இருக்கிறான் தம்பி இருக்கிறான் என்று யாரை நம்பி நிற்கிறார்கள் உங்களுக்கு நீங்க தான் நம்பிக்கை…..