
இன்று தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்..
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் இன்று செப்டம்பர் 29 பதவி ஏற்கிறார் ஆளுநர் மாளிகை இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது, மேலும் துணை முதல்வர் ஒரு பதவி அல்ல பொறுப்பு என்று உதயநிதி நெகிழ்ச்சி அடைந்துள்ளார் தமிழக துணை முதல்வராக உதயநிதி இன்று பதவி ஏற்க உள்ளதை அடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் இதை அடுத்து அவர் வெளியிட்ட பதிவில் துணை முதல்வர் என்பது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழக மக்களின் ஏற்றத்துக்காக பெரியார் அண்ணா கலைஞர் வகுத்து தந்த பாதையில் மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டலில் சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார், மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிலையில் அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் மேலும் திமுக தொண்டர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர், மேலும் தமிழகத்தில் மூன்றாவது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!!