துத்தி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
மூலிகை நிறைந்த இலைகளில் முக்கியமான ஒன்று துத்தி இலை. இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.அதனை குறித்து தெளிவாக பார்க்கலாம்.
மூலம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் துத்தி இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒற்றடம் கொடுத்தால் குணமாகும்.
மேலும் வெள்ளைப் படுதல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நெய்யுடன் துத்தி இலைகளை வதக்கி சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக அப்படி சாப்பிடும் போது உணவில் புளி, காரம், மாமிசம் தவிர்த்து சாப்பிடுவது நல்லது.
துத்திக் கீரை மற்றும் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் துத்தி இலை ரசம் வைத்து குடித்து வந்தால் நல்லது.
முகத்தை கெடுக்கும் முகப்பருக்களை வராமல் தடுப்பதற்கு துத்திச் செடியின் வேரை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து பிறகு அதனை காய்ச்சி வடிகட்டி பருக்களின் மீது தடவி வர வேண்டும். இப்படி தொடர்ந்து தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
எனவே மருத்துவ குணங்கள் நிறைந்த துத்தி இலையின் ஆரோக்கிய குணங்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.