துப்பட்டாவில் பிணமாக தொங்கிய இரண்டு சிறுமிகள்..!! கொலையா?.. தற்கொலையா?..
உ.பி, மாநிலம் பருக்காபாத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கிருஷ்ணா ஜெயந்தி விழாவை காண வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 சிறுமிகளின் துப்பட்டாக்களும் ஒன்றாக கட்டப்பட்டிருந்துள்ளது. காவல்துறையினர் இச்சம்பவத்தை தற்கொலை என்று விசாரணை செய்து வரும் நிலையில் சிறுமிகள் கொலை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.