துயரமான மனநிலையையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது எப்படி : அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

ஆனந்தமாக வாழ்வதில் அனைவருக்கும் விருப்பம் உண்டு என்றாலும் சோர்ந்து போகிற சூழ்நிலையும் சில நேரங்களில் ஏற்படத்தான் செய்கிறது. அத்தகைய மனநிலையை எப்படி கையாளுவது கேள்விக்குறி எல்லோருக்கும் இருக்கும். நடக்க வேண்டும் என்று சில மனிதர்களையோ சில சம்பவங்களையோ எதிர்பார்ப்பீர்கள்..

அது வேற மாதிரி ஆகிவிட்டால் துயரம் ஏற்படுகிறது யாருக்கு நான் என்ற உணர்வு அதிகம் இருக்கிறதோ அவர்கள் மிக விரைவில் இது போன்ற மன காயங்களுக்கு ஆளாகிறார்கள். மனச்சோர்வு உடைய பலரின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்கள் ஆரம்பமாய் இருப்பது தெரியவரும் அவர்கள் தங்களுக்கு தானே துன்பம் விளைவித்து கொள்வார்கள். இது அடுத்தவரின் அனுதாபம் பெற முயற்சி தானே தவிர வேறு அல்ல. மனதில் சோர்வும் துயரமும் நிறைந்திருக்கும் போது வாழ்க்கையின் உண்மைத் தன்மை உணர முடியாது மனம் சரியில்லாத போது ஒரு மலரை பார்த்தால் கூட அதன் அழகை உணர முடியாது சிலர் துயரமான மனநிலையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் அவர்கள் எல்லாம் கர்ம யோகிகளாக ஆகி இருப்பார்கள். எதிர்மறை என்று எதுவுமில்லை எதிர்மறையானதும் அடிப்படையில் நேர்மறை தான் ஒரு பல்பு எரிவதற்கு பாசிட்டிவ் நெகட்டிவ் என்ற இணைப்புகளும் தேவை துயரம் என்ற உணர்வு ஏற்படுமேயானால் அதை பயன்படுத்தி அதன் மூலமாகவே இதயத்தை அன்புமயமாக்க முடியும். மாறாக துயரத்தில் கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது என்றால் அது முட்டாள்தனம். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது ஒன்று மட்டுமே முக்கியமல்ல எந்த உணர்ச்சியையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள தெரிகிற பக்குவம் தான் முக்கியம்…!!

Read Previous

இந்த ராசிக்கு காதல் மீது நிறைய ஆர்வம் இருக்கும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

எதிர்மறை எண்ணங்களை விரட்டும் ஜப்பானியர்கள் டெக்னிக் அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular