
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஜோதிடங்களை பார்ப்பது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் ராகு கேது என ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பது உண்டு, சில தோஷங்கள் நிவர்த்தியாவது உண்டு சில தோஷங்கள் நிவர்த்தி செய்ய முடியாமல் பின் தொடர்வதும் உண்டு.
ஆனால் துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தியாகும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது, ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துர்க்கை அம்மன் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், ராகுவின் தேவதையான துர்க்கை பூஜிக்க ஏற்ற காலம் ராகு காலமே, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி எலுமிச்சையில் தீபம் ஏற்றி வந்தால் தோஷங்கள் நீங்கிடும் இதனை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த பூஜை செய்து வந்தால் ராகு தோஷம் நிவர்த்தியாகி அவர்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியங்கள் கிடைக்கும் என்று கூறுகின்றனர்..!!